மேலும் செய்திகள்
கிணற்றில் இறந்து கிடந்த எஸ்டேட் காவலாளி
17-Nov-2024
பொன்னேரி:பொன்னேரி அடுத்த மூலத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 58. இவர், பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பாததை தொடர்ந்து, அவற்றை தேடி ஏழுமலை, எலவலம்பேடு ஏரிக்கரை பகுதிக்கு சென்றார்.அப்பகுதியில் இருந்த ஒரு பசு மாட்டை பிடித்துக் கொண்டு மற்ற மாடுகளை தேடியபடி நடந்து சென்றார். அப்போது, அப்பகுதியில் மின் ஒயர் ஒன்று அறுந்து கிடந்தது.இந்த மின் ஒயரில் ஏழுமலை, பசு மாட்டுடன் சிக்கி கொண்டார். சம்பவ இடத்திலேயே ஏழுமலையும், பசுமாடும் உயிரிழந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார், ஏழுமலையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மின் வாரியத்தினர், மின் இணைப்புகளை துண்டித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.பழுதடைந்த கம்பங்கள் மற்றும் மின் ஒயர்களை மின்வாரியம் உரிய முறையில் பராமரிக்காததே உயிர்பலிக்கு காரணம் என, கிராமவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
17-Nov-2024