உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பனப்பாக்கம் ஏரி கலங்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பனப்பாக்கம் ஏரி கலங்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பு பாசன ஏரி உள்ளது. இதில் தேங்கும் மழைநீர், 300 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது.இந்த ஏரி சுற்றிலும் கரை கொண்டதாக அமைந்து உள்ளது. அருகில் உள்ள மேய்க்கால் நிலப்பகுதியில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு, வரத்து கால்வாய் வழியாக கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரி நிரம்பியதை தொடர்ந்து, கலங்கல் நிரம்பி வழிகிறது.மேற்கண்ட கலங்கலின் அடிப்பகுதியில் ஆங்காங்கே சிறு சிறு ஓட்டைகள் இருப்பதால், அதன் வழியாகவும் மழைநீர் வீணாவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.நீர்வளத்துறையினர் மேற்கண்ட ஏரியின் கலங்கல் பகுதியை புதுப்பித்து, மழைநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி