உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதுச்சேரிமேடு ஏரியின் கரைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

புதுச்சேரிமேடு ஏரியின் கரைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பொன்னேரி:கரைகள் சேதமடைந்து, பராமரிப்பு இன்றி கிடக்கும் புதுச்சேரிமேடு ஏரியை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னேரி அடுத்த புதுச்சேரிமேடு கிராமத்தில், 600 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில், நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், ஆழ்துளை மோட்டார்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதனால், இங்குள்ள பாசன ஏரியில் தேங்கும் மழைநீரை கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை சம்பா பருவத்தின்போது நெல் பயிரிடப்படுகிறது. மேற்கண்ட ஏரியின் கரைகள் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. கரைகள் முழுதும் மண் சரிந்து, செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.மழைக்காலங்களில் சேதமடைந்துள்ள கரைகள் உடைந்து, மழைநீர் வெளியேறி வீணாவதுடன், அருகில் உள்ள விவசாய நிலங்களையும் மூழ்கடிக்கிறது. இதனால், ஏரியில் மழைநீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.கடந்தாண்டும் உடைப்பு ஏற்பட்ட நிலையில், தற்காலிக தீர்வாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. ஆனால், நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளவில்லை.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:ஏரி நீரை நம்பியே விவசாயம் செய்கிறோம். கரைகள் சேதமடைந்து இருப்பதால், தேங்கும் மழைநீரும் உடைப்புகள் வழியாக வெளியேறி விடுகிறது.வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன், ஏரியின் கரைகளை பலப்படுத்த நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !