உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நேரடி விற்பனைக்கு விவசாயிகள் ஊக்குவிப்பு

நேரடி விற்பனைக்கு விவசாயிகள் ஊக்குவிப்பு

ஆர்.கே.பேட்டை:விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முன்வர வேண்டும் என, விவசாயிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி புதுாரில் நேற்று, விவசாயிகள் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் கருத்தரங்கம் நடந்தது. விளக்கணாம்பூடி சமுதாயக்கூடத்தில் நடந்த கருத்தரங்கில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கருத்தரங்கிற்கு, விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இயற்கை விவசாயி தர்மன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், அவற்றை தாங்களே நேரடியாக விற்பனை செய்ய முன்வர வேண்டும். வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டு, பின் அதிக விலை கொடுத்து தானியங்களை கடையில் வாங்கும் நிலையை மாற்ற வேண்டும். விவசாயிகள் ஒன்றிணைந்து, விளைபொருட்களை சந்தைப்படுத்த முன்வர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி