உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

 விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 150க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து மனுவை பெற்ற கலெக்டர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின், 20 விவசாயிகளுக்கு 28.81 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, கலெக்டரின் வேளாண்மை நேர்முக உதவியாளர் வேதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை