உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 31ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

31ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் 31ம் தேதி நடக்கிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 31ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும், தீர்வு காண பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !