உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செக்கஞ்சேரி பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலையில் தீ விபத்து

செக்கஞ்சேரி பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலையில் தீ விபத்து

சோழவரம்:தனியார் பிளாஸ்டிக் அரவை தொழிற்சசாலையின் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், நள்ளிரவில் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சோழவரம் அடுத்த செக்கஞ்சேரி கிராமத்தில், தனியார் பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலை உள்ளது. இங்கு, பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அரைத்து மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது.நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீரென தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் குவிக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்தது. எளிதில் தீப்பற்றக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் தீ மளமளவென, வளாகம் முழுதும் பரவியது.இதனால் புகை மண்டலம், துர்நாற்றமும் வீசியதால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து செங்குன்றம், அம்பத்துார், மாதவரம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்தன.மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், ராசாயன நுரையை தெளித்தும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ