உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தணிகாசலம்மன் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா

தணிகாசலம்மன் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா

திருத்தணி:திருத்தணி அக்கைய்ய நாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், நேற்று முதலாமாண்டு கும்பாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் விழா நடந்தது. இதற்காக, கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மூலவர் அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.மேலும், கோவில் வளாகத்தில் ஸ்வர்ண வாராஹி சிலை பிரதிஷ்டையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும், தொடர்ந்து ஊஞ்சல் சேவையும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி