மேலும் செய்திகள்
அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை
26-Sep-2025
இடியும் அபாய நிலையில் ஊராட்சி அலுவலக கட்டடம்
21-Sep-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் உள்ள மீன் மார்க்கெட் கட்டடம், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், வியாபாரிகள் மற்றும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், கடந்த 1989ம் ஆண்டு, 'நாள் அங்காடி' கட்டடம் கட்டப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இக்கட்டடத்தில், ஆடு, கோழி, மீன், இறைச்சி, மளிகை என, 25 கடைகள் இயங்கி வருகின்றன. அங்காடியின் பின்புறம், ஆடு அடிக்கும் தொட்டிக்கான தனி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் அதிகளவில் மீன் கடைகள் இருப்பதால், மீன் மார்க்கெட் கட்டடம் என அனைவராலும் அழைக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் கட்டடத்தின் துாண்கள், சுவர்கள், கூரை ஆகியவை விரிசலடைந்தன. அதன்பின், அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து, மீன் வியாபாரிகள் மற்றும் மக்கள் மீது விழுந்து காயம் அடைவது வாடிக்கையாக உள்ளது. தற்போது, கட்டடம் முழுதும் சேதமடைந்து, உள்ளிருக்கும் கம்பிகள் அனைத்தும் தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் இயங்கி வருகிறது.எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்தில் வியாபாரிகளும், மக்களும் உள்ளனர். கட்டடத்தின் மோசமான நிலையை உணர்ந்து, முதல் தளத்தில் இயங்கி வந்த கும்மிடிப்பூண்டி தபால் நிலையம், மூன்று ஆண்டுகளுக்கு முன், வாடகை கட்டடத்திற்கு இடம் மாற்றப்பட்டது. எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன், உடனே கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26-Sep-2025
21-Sep-2025