உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடலில் கவிழ்ந்த படகு நீந்தி கரையேறிய மீனவர்கள்

கடலில் கவிழ்ந்த படகு நீந்தி கரையேறிய மீனவர்கள்

பழவேற்காடு, டிச. 17-பழவேற்காடு மீனவப் பகுதியில், சில தினங்களாக கடல் சீற்றத்துடன் இருக்கிறது. கடல் அலைகளால் படகுகளை இயக்க முடியாத சூழலில் மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.ஒரு சில மீனவர்கள் அன்றாட வருவாய்க்காக வேறு வழியின்றி தொழிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, வைரவன்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இளங்கோ, 27, ஜானகிராமன், 58, சுந்தர், 29, ஆகியோர் பைபர் படகில், மீன்பிடிக்க சென்றனர்.முகத்துவாரம் வழியாக கடலுக்குள் செல்லும்போது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் படகு சிக்கி, தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் இருந்த மூவரும் கடலில் விழுந்தனர். மூவரும் நீந்தி கரை சேர்ந்தனர். அதே சமயம் இவர்களது படகு தலைகுப்புற கவிழ்ந்ததில், அதில் இருந்த, 80,000 ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் அலையில் அடித்து செல்லப்பட்டன.மேலும், கடலில் கவிழ்ந்த படகு, அலையில் அடித்து வரப்பட்டு, முகத்துவாரம் பகுதியில், மண் அரிப்பை தடுக்க நிரந்தர தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்காக, கொட்டப்பட்டுள்ள பாறைகளில் மோதி, துண்டு துண்டாக உடைந்து சேதம் அடைந்தது. இதனால் மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. பொன்னேரி மீன்வளத் துறையினர் மற்றும் திருப்பாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை