ராக்கெட் ஏவப்பட உள்ளதால் 18ம் தேதி மீன் பிடிக்க தடை
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவு தள மையத்தில் இருந்து, வரும் 18ம் தேதி காலை 6:59 மணிக்கு 'பி.எஸ்.எல்.வி., சி-61/இ.ஓ.எஸ்.,09' ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.ஸ்ரீஹரிகோட்டா ஏவு தள மையம் அருகே, திருவள்ளூர் மாவட்ட மீனவ கிராமங்கள் அமைந்திருப்பதால், அன்றைய தினம், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், மீன்பிடி தொழிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் பொன்னேரி உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் சார்பில், அனைத்து மீனவ கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நேற்று அனுப்பப்பட்டது.