மேலும் செய்திகள்
தாயை திட்டியதால் தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு
21-Apr-2025
அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், பழனிபேட்டையில், நேற்று காலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில், ஐந்து பேர் குழுவாக சுற்றித் திரிந்தனர்.போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சரண்குமார், 19, ஸ்ரீதர், 21, சஞ்சய், 22, அருண் பிரகாஷ், 21, சந்திரசேகர், 21 என்பதும், ஐந்து பேரும் சென்னையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து, அரக்கோணத்தில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 68,000 ரூபாய் மதிப்பிலான 1,769 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
21-Apr-2025