உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூவம் பாலத்தில் வெள்ளநீர் 8வது நாளாக தொடரும் பாதிப்பு

கூவம் பாலத்தில் வெள்ளநீர் 8வது நாளாக தொடரும் பாதிப்பு

திருமழிசை, திருமழிசை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் வெள்ளவேடு அடுத்துள்ளது புதுச்சத்திரம். இங்கிருந்து கூவம் ஆற்றைக் கடந்து, திருநின்றவூர் வழியாக ஆவடி மற்றும் பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 1950ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.இந்த தரைப்பாலம் வழியே 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அரசு, தனியார் பேருந்து, கனரக வாகனம் என தினமும், 15,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த தரைப்பாலம் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் போக்குவரத்து துண்டிக்கப்படும்.இந்நிலையில், சில தினங்களாக பெய்த மழையால், இந்த தரைப்பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெள்ளவேடு போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தடுப்புகளை அமைத்து வாகன போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகள், எட்டு நாட்களாக சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் புதுச்சத்திரம் - திருநின்றவூர் இடையே புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை