உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் விழா

திருமழிசையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் விழா

திருமழிசை:திருமழிசை பேருந்து நிலையம் அருகே, 1.24 கோடி ரூபாய் மதிப்பீல் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.திருமழிசை பேரூராட்சி தி.மு.க., தலைவர் மகாதேவன் முன்னிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் விழா நடந்தது.சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் நாசர் மற்றும் பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.திருமழிசையில், 4,000 சதுர அடியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலகம் கட்டட பணிகளை ஆறு மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை