ஒருவரை தாக்கிய நால்வருக்கு வலை
திருத்தணி:திருத்தணி அடுத்த, பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்,46; அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி, 45. என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாணிக்கம் வீட்டின் முன் உட்கார்ந்திருந்த போது, லட்சுமி மற்றும் அவரது மகன்கள் சரவணன், 27, காமராஜ்,25, கதிர், 23, ஆகியோர், மாணிக்கமிடம் தகராறு செய்தனர்.மேலும், இரும்பு கம்பியால் மாணிக்கம் தலை மீது தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.படுகாயமடைந்த மாணிக்கம், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து மாணிக்கம் அளித்த புகாரையடுத்து, மேற்கண்ட நால்வர் மீதும் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.