உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை மாத்திரைகள் கடத்திய நால்வர் கைது

போதை மாத்திரைகள் கடத்திய நால்வர் கைது

திருத்தணி, திருப்பதியில் இருந்து சென்னை சென்ற அரசு பேருந்தில், போதை மாத்திரைகள் கடத்தி வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து திருத்தணி, திருவள்ளூர் வழியாக சென்னை கோயம்பேடு வரை செல்லும் அரசு பேருந்தில், போதை மாத்திரைகள் கடத்தி செல்வதாக, எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நேற்று, திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். நேற்று மாலை, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த தடம் எண்: 201 என்ற அரசு பேருந்தில், தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். பேருந்தில் நான்கு இளைஞர்கள் வைத்திருந்த உடைமைகளில், மொ த்தம் 730 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மாத்திரைகள், சென்னை சுற்றுப்பகுதியில் விற்பனை செய்ய இருந்தது தெரிந்தது. பின், திருத்தணி காவல் நிலையத்தில் நால்வரையும் ஒப்படைத்தனர். விசாரணையில், சென்னை ஊரப்பாக்கம் ராபின், 26, கூடுவாஞ்சேரி சூர்யா, 24, சென்னை மாங்காடைச் சேர்ந்த சகோதரர்கள் ஹாரீஸ், 25, சையது அமீத், 22, என தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், நால்வ ரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ