உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் திருடிய நால்வர் கைது

பைக் திருடிய நால்வர் கைது

மீஞ்சூர்,மீஞ்சூர் அருகே உள்ள அரியன்வாயல் பகுதியில் இரண்டு பைக்குகள் திருடுபோனது.இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி.,க்களை ஆய்வு செய்தனர்.அவற்றில் இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு, பைக் திருடர்களை தேடி வந்தனர். இதில் தொடர்புடைய பெரியபாளையம் அடுத்த வெங்கல் பகுதி செல்வகுமார், 28, மீஞ்சூர் அடுத்த அக்கரம்பேடு பகுதி சூர்யா, 37, ஊரணம்பேடு ஸ்ரீதர், 30 ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் அளித்த தகவலின்படி திருட்டு பைக்கை வாங்கி உடைத்து, உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்த தோட்டக்காடு கிராமத்தை காயலான் கடை வியாபாரி வெங்கடேஸ் ராஜா, 30, என்பவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை