உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குரூப் - 4 போட்டி தேர்வுக்கு ஜன., 3 முதல் இலவச பயிற்சி

குரூப் - 4 போட்டி தேர்வுக்கு ஜன., 3 முதல் இலவச பயிற்சி

திருவள்ளூர், குரூப் - 4 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி, ஜன., 3ம் தேதி துவங்குகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப் -- 4 பணி காலியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்பு, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் ஜன., 3ல் துவங்கப்பட உள்ளது.இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளோர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, மொபைல்போன் வாயிலாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களான திங்கள் - வெள்ளி வரை, காலை 10:30 மணி முதல், மதியம் 3:30 வரை வரும் நடைபெறும்.மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 97897 14244 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !