மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
19-Apr-2025
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த விடியங்காடு கிராமத்தில் கங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்காக, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கியுள்ளனர்.வரும் 1ம் தேதி வரை தினமும் அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முதல் நாளான நேற்று காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலா வந்தார்.வரும் 29ம் தேதி கங்கையம்மன் முத்துபல்லக்கில் எழுந்தருளுகிறார். 30ம் தேதி பசுமை மரத்தோப்பில் அம்மன் சிரசு ஏற்றம் நடைபெறும்.
19-Apr-2025