உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கங்கையம்மன் ஜாத்திரை விழா

கங்கையம்மன் ஜாத்திரை விழா

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கசத்திரம் காலனியில் கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு சக்தி அம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலையில் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூங்கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாம்பாக்கசத்திரம் காலனி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாலங்காடு

திருவாலங்காடு சாலையில் உள்ள கங்கையம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.மதியம் 1:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி, பன்றி காவு கொடுக்கப்பட்டு பின் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.மாலை, 6:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்துடன், பூங்கரகம் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி