உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவுநீர் குளமாகி வரும் கங்கையம்மன் கோவில் குளம்

கழிவுநீர் குளமாகி வரும் கங்கையம்மன் கோவில் குளம்

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட 9வது வார்டு பகுதியில் குடியிருப்புகள் சூழ்ந்துள்ள பகுதியில் சர்வே எண் 17/2ல் பேரூராட்சிக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை பகுதிவாசிகள் கங்கையம்மன் கோவில் குளம் என்று அழைத்து வருகின்றனர்.இந்த குளத்து நீரை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளம் பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சேகரமாகி கழிவுநீர் குளம் போல் மாறியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சி குளத்தை துார்வாரிசீரமைக்க வேண்டுமென இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்