மேலும் செய்திகள்
கவரைப்பேட்டை பஜார் பகுதி சிப்காட்டில் மழைநீர் தேக்கம்
9 hour(s) ago
தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
9 hour(s) ago
மர்ம காய்ச்சல் 1 வயது குழந்தை பலி
9 hour(s) ago
மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு
9 hour(s) ago
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து நொச்சிலி வழியாக கே.ஜி.கண்டிகை செல்லும் வழியில், ஜி.சி.எஸ். கண்டிகை மற்றும் ராமசமுத்திரம் சமத்துவபுரம் செல்லும் கூட்டு சாலை குறுக்கிடுகிறது. நான்கு சாலைகள் சந்திக்கும் இந்த பகுதியில், நிழற்குடை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், சமத்துவபுரம் சாலையில் மட்டும் பெயரளவிற்கு ஒரு வேகத்தடை உள்ளது. இதர மூன்று சாலைகளிலும் வேகத்தடை இல்லை. இதனால், இந்த கூட்டு சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. ஆர்.கே.பேட்டையில் இருந்து ஜி.சி.எஸ்.கண்டிகை வழியாக மத்துார் செல்லும் வாகனங்கள், பள்ளிப்பட்டில் இருந்து கே.ஜி.கண்டிகை செல்லும் வாகனங்கள் என தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள், இந்த கூட்டு சாலையை கடக்கின்றன.இது தவிர, நெசவாளர்கள் தங்களின் பாவு, நுால் கட்டுகளுடன் இருசக்கர வாகனங்களுடன் இந்த கூட்டு சாலையை கடந்து மத்துார், பொதட்டூர்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலம் நகரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டு சாலை பகுதியில், பேரி கார்டு நிறுவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago