உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  அரசு பஸ்கள் மோதி விபத்து 10 பேர் படுகாயம்

 அரசு பஸ்கள் மோதி விபத்து 10 பேர் படுகாயம்

பொதட்டூர்பேட்டை: திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து மீது நகர பேருந்து மோதியதில், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், அரசு பேருந்து தடம் எண்: 212ஏ நேற்று மதியம் 12:30 மணியளவில், திருவண்ணாமலையில் இருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. பொதட்டூர்பேட்டை பணிமனை அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பணிமனைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து தடம் எண்: டி43ஏ, மீது மோதியது. இங்குள்ள குறுகலான சாலை திருப்பத்தில் எதிரெதிரே வந்து கொண்டிருந்த பேருந்தை கவனிக்க முடியாததால் இந்த இரண்டு பேருந்துகளும் மோதின. இந்த விபத்தில், திருவண்ணாமலையில் இருந்து வந்த பேருந்தில் பயணித்த கோண சமுத்திரத்தை சேர்ந்த ராமச்சந்திரன், 40, ஹேமாவதி, 35, ஜெயராமன், 52, பழனி, 61, மஞ்சுளா, 40, குமாரி, 45 ஆகியோரும், பொதட்டூர்பேட்டையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் சந்திரசேகர், 44, சதீஷ், 41, மற்றும் நடத்துநர்கள் கோவிந்தசாமி, 30, சிவா, 52, ஆகிய 10 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரும் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். 3 பேர் காயம் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மூவர் படுகாயம் அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பெருங்காஞ்சியை சேர்ந்தவர் பவின், 35. இவர் நேற்று அவரது ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில், மனைவி லட்சுமி, 25, மகள் ஸ்ரீமதி, 6, ஆகியோருடன் சோளிங்கரில் இருந்து பெருங்காஞ்சி நோக்கி சென்றார். திருவள்ளூர் மாவட்டம், புத்தேரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே வந்த இன்னோவா கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், நவீன், லட்சுமி, ஸ்ரீமதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை