உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  தாமதமாக இயக்கப்படும் அரசு பஸ்கள் ஊத்துக்கோட்டையில் பயணியர் அவதி

 தாமதமாக இயக்கப்படும் அரசு பஸ்கள் ஊத்துக்கோட்டையில் பயணியர் அவதி

ஊத்துக்கோட்டை: அரசு பேருந்துகள் குறித்த நேரத்திற்கு இயக்காமல், தனியார் பேருந்துகளுக்கு வசதி ஏற்படுத்துவதால், அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுவதுடன் பயணியர் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் இருந்து, கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம் சத்தியவேடு, காளஹஸ்தி, நெல்லுார், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்திற்கு இயக்குவதில்லை. உதாரணத்திற்கு காலை, 5:50 மணிக்கு பணிமனையில் இருந்து பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து, 6:00 மணிக்கு திருப்பதி செல்ல வேண்டும். ஆனால், 6:15 மணிக்கு பேருந்து நிலையம் செல்லாமல், அங்குள்ள அண்ணாதுரை சிலை அருகே திரும்பி, திருப்பதி செல்கிறது. இதில், 5:45 - 6:30 மணி வரை, இரண்டு தனியார் பேருந்துகள் காளஹஸ்தி, திருப்பதி செல்வது குறிப்பிடத்தக்கது. நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி செல்லும் பயணியர் பேருந்து நிலையத்தில் காத்திருந்து ஏமாறுவது தான் வாடிக்கையாக நிகழ்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டையில் அரசு பேருந்துகள் குறித்த நேரத்திற்கு பேருந்து நிலையம் சென்று வர வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை