அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுக கூட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கு மாணவர் அறிமுக சேர்க்கை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, தமிழக மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன் பங்கேற்று பேசியதாவது:மாதிரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தேசிய அளவிலான நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர். எனவே, மாணவ - மாணவியரை தலைமையாசிரியர்களும், பெற்றோரும் மாதிரி பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேச்சல் பிரபாவதி, அரவிந்தன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.