உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கதவு இல்லாத அரசு பள்ளி

கதவு இல்லாத அரசு பள்ளி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சி சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி , சமையல் கூடம் , அங்கன்வாடி மையம், வி.ஏ.ஓ., அலுவலகம் ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ளது.இந்த வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2024- ----25ம் ஆண்டு 8 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 250 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.ஆனால் கதவு அமைக்காததால் ஆடு, மாடுகள், நாய்கள் இரவு, பகல் நேரங்களில் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிகின்றன.மேலும் மது பிரியர்கள் மது அருந்தி விட்டு பிளாஸ்டிக் பாட்டில் , மதுபாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர்.இதை தடுக்க புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுச்சுவருக்கு கதவு அமைக்க வேண்டும் என, சின்னகளக்காட்டூர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை