மேலும் செய்திகள்
குளிர் காயும் போது மூதாட்டி தீக்காயம்
2 hour(s) ago
ஆற்றங்கரையில் அழுகிய சடலம் கண்டெடுப்பு
2 hour(s) ago
மேய்க்கால் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு விவசாயிகள் குற்றச்சாட்டுசெங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: ஜெயச்சந்திரன், விவசாயி, அரியனுார்: மதுராந்தகம் ஏரியிலிருந்து, செய்யூர் வரை கடந்த 1986ம் ஆண்டு, 32 கி.மீ., துாரம் உயர்மட்ட கால்வாய் கட்டப்பட்டது. இந்த உயர்மட்ட கால்வாய், 40 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, இந்த உயர்மட்ட கால்வாயை துார்வாராமல் விட்டதால், கால்வாய் துார்ந்துள்ளது. இதனால், 40 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டு, விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், கால்நடை மேய்ச்சலுக்காக மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், கால்நடைகளை மேய்க்க இடம் இல்லாமல் சிரமமாக உள்ளது. அத்துடன், அரசு திட்டங்களுக்கும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை மீட்டு பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சினேகா கலெக்டர்: மதுராந்தகம் - செய்யூர் உயர்மட்ட கால்வாய் சீரமைப்புக்கு நீர்வளத்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். லட்சாதிபதி, விவசாயி : திருக்கழுக்குன்றம் தாலுகாவில் ஆயப்பாக்கம், நல்லாத்துார், வாயலுார் கிராமங்களில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பாதுகாக்க, நீதிமன்றம் செல்ல உள்ளேன். கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திரு வள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் நெல், செங்கல்பட்டு மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 hour(s) ago
2 hour(s) ago