மேலும் செய்திகள்
முதல்வர் கவனம் சிறப்பு கட்டுரை
09-Nov-2024
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட ஏ.ஆர்.எஸ்., சாலை எனப்படும் வடக்கு சிப்காட் சாலை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில், சிப்காட் நான்காவது குறுக்கு சாலை சந்திக்கும் இடத்தில், சாலை சேதமடைந்து மிக பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்ததால், அந்த சாலை பள்ளத்தில் மழை நீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், அவ்வழியாக கடந்து செல்லும் இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அந்த பள்ளத்தை கடந்து செல்லும் போது கனரக வாகனங்கள் கவிழ்ந்து விழுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர். பள்ளம் மேலும் பெரியதாக மாறும் முன், சீரமைப்பு பணிகளை, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அந்த சந்திப்பில் மழைநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
09-Nov-2024