உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கனமழை  எதிரொலி கரும்பு  அரவை  நிறுத்தம்

கனமழை  எதிரொலி கரும்பு  அரவை  நிறுத்தம்

திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காடில் இயங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான கரும்பு அரவை இலக்கு, 2 லட்சம் டன்னாக நிர்ணயித்து கடந்த மாதம் அரவை துவங்கி நடந்து வந்தது.இந்நிலையில், மழை காரணமாக கரும்பு அறுவடை செய்யவில்லை இதனால் அரவை நேற்று, நிறுத்தப்பட்டது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழை காரணமாக விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் கரும்பை வெட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மழை நின்று கரும்பு வரத்து வந்ததும் மீண்டும் அரவை துவங்கும். பயிரில் தேங்கிய நீரை அகற்ற உரிய முறையில் அறிவுறுத்தி உள்ளோம்.கரும்பு வரத்து வந்ததும் மீண்டும் அரவையை துவக்க உள்ளோம்இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி