மேலும் செய்திகள்
அரவஅரவக்குறிச்சியில் இடியுடன் மழை
03-Nov-2024
நாள் முழுவதும் பெய்த சாரல் மழையால் பாதிப்பு
15-Oct-2024
திருத்தணி:திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நேற்று முன்தினம் துாறல் மழை பெய்தது. நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, திருத்தணியில் கனமழை பெய்தது. இதனால், சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில தெருக்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து, ஆறாக ஓடியது. தொடர்ந்து, அவ்வப்போது மழை பெய்து வந்ததால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே மக்கள் முடங்கினர்.முருகன் மலைக்கோவிலில் ராஜேகோபுரத்திற்கும் தேர்வீதிக்கும் இடையே இணைப்பு படிகள் அமைப்பதற்காக, மண் கொட்டி சமன்படுத்தப்பட்டிருந்த மண், மழையால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இணைப்பு படிகள் அமைக்கும் பணிகள் மேலும் காலதாமதம் ஆகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதே போல் திருத்தணி சுற்றியுள்ள கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
03-Nov-2024
15-Oct-2024