மேலும் செய்திகள்
ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலி
14-Oct-2024
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
25-Sep-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியைச் சேர்ந்தவர் ரவாத், 39. ஊர்காவல் படை காவலராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் நகர காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவருடன் கலெக்டர் அலுவலகம் அருகே ஊத்துக்கோட்டை சாலை சந்திப்பு பகுதியில் இரவு ரோந்து பணியின் போது வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்தை நிறுத்த முயன்ற போது பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Oct-2024
25-Sep-2024