உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திறப்பு விழா காணாத கழிப்பறையால் அவதி

திறப்பு விழா காணாத கழிப்பறையால் அவதி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சி காலனியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் இயற்கை உபாதையை திறந்தவெளியில் கழித்து வருகின்றனர்.இதனால் பெண்கள், குழந்தைகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனர். எனவே, இப்பகுதிவாசிகளின் நலன் கருதி, பொது கழிப்பறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக தூய்மை பாரத இயக்கம் சார்பில், 2023- - -24ம் ஆண்டு 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மூன்று மாதங்களுக்கு முன் சமுதாய சுகாதார கழிப்பறை கட்டடப்பட்டது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிப்பறை கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை