இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை, ‛டி6' காவல் நிலையத்தின் முதல் இன்ஸ்பெக்டர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்டு ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பொதட்டூர்பேட்டை, ‛டி6' காவல் நிலையம், இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தின் முதல் இன்ஸ்பெக்டராக ராஜா என்பவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், இதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்ட உணவுபொருள் பாதுகாப்பு பிரிவில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வந்தார். பதவி உயர்வு பெற்று, பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தின் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார். ---