உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் பிரச்னை வராமல் கண்காணிக்க ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தல்

குடிநீர் பிரச்னை வராமல் கண்காணிக்க ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தல்

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளில், 228க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒரு மாதமாக பல ஊராட்சிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரம் இருந்தும், மின்மோட்டார்கள் இயக்கி, மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமல் பம்ப் ஆப்பரேட்டர்கள் அலட்சியம் காட்டி வந்தனர்.உதாரணமாக, பெரிய கடம்பூர், கன்னிகாபுரம், செருக்கனுார், எஸ்.அக்ரஹாரம் மற்றும் வி.கே.ஆர்.புரம் ஊராட்சிகளில், கடந்த மாதம் முழுதும் குடிநீர் சீராக வினியோகம் செய்யவில்லை என, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல், ஊராட்சி அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், ஊராட்சி செயலர்கள் மற்றும் பம்ப் ஆப்பரேட்டர்களை வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில், 'ஊராட்சி செயலர்கள் மற்றும் பம்ப் ஆப்பரேட்டர்கள் ஒன்றிணைந்து, கிராமங்களில் குடிநீர் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'குடிநீர் பிரச்னை குறித்து, அந்தந்த ஊராட்சி செயலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை