உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அறிவுசார் நகரில் தொழில் துவங்க கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு

அறிவுசார் நகரில் தொழில் துவங்க கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை, டதிருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில், 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், 200 கோடி ரூபாய் செலவில், 1,700 ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைக்கிறது. அங்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பல்கலை, கல்வி நிறுவனங்கள் போன்றவை தங்களின் கிளை, ஆய்வகம், திறன் மேம்பாட்டு மையம் போன்றவற்றை அமைக்கலாம். இதன் வாயிலாக, தமிழக மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் கல்வி கிடைப்பதுடன், பல நாடுகளின் அறிவு பரிமாற்றம் கிடைக்கும். தமிழக கல்வி, தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அறிவுசார் நகரத்தில் உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்கிடையே, அறிவு சார் நகரில் தொழில் துவங்க வருமாறு, தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்ப கழகம், மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட, அனைத்து தேசிய கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் துறை கடிதம் எழுதியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை