உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் மாரத்தான் இளைஞர்களுக்கு அழைப்பு

திருவள்ளூரில் மாரத்தான் இளைஞர்களுக்கு அழைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கில், இளைஞர்களுக்கு மாரத்தான் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்ட விளையாட்டரங்குகளில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் வாலிபால் போட்டி, ஏப்., 3 - 5ம் தேதிகளில் நடக்கிறது.மேலும், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஏப்., 6ம் தேதி காலை 6:00 மணிக்கு மாரத்தான் போட்டி நடக்கிறது. 26 - 35 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு, 20 கி.மீ., துாரம், பெண்களுக்கு 10 கி.மீ., துாரம் போட்டி நடைபெறும்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து இளைஞர்களும் இப்போட்டியில் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ