உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடைக்கு மின் இணைப்பா?

நிழற்குடைக்கு மின் இணைப்பா?

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜபேட்டை அமைந்துள்ளது. இங்குள்ள பள்ளிப்பட்டு சாலையில், பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில், சமீபத்தில் மின் இணைப்பு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்தவொரு மின்சாதனமும் நிழற்குடையில் இல்லை.மின் இணைப்பு பெட்டியும் திறந்தநிலையில் உள்ளது. இதனால், பகுதிவாசிகள் நிழற்குடையில் காத்திருக்க தயங்குகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள மின் மீட்டரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை