உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பட்டாபிராம் இந்து கல்லுாரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

பட்டாபிராம் இந்து கல்லுாரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

திருவள்ளூர்:பட்டாபிராம் இந்து கல்லுாரியில், நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லுாரியில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், படித்து வேலையற்ற இருபாலருக்குமான வேலை வாய்ப்பு முகாம், நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை நடக்கிறது. அதில், பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, வேலை வாய்ப்பு அளிக்க உள்ளன. குறைந்தபட்சம், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தோர், வயது, கல்வித் தகுதி முதலான உரிய ஆவணங்களுடன் பங்கேற்று, தங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வேலை வாய்ப்பை பெறலாம். மேலும் விபரங்களுக்கு, திட்ட இயக்குநர், மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டடம், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை