மதுக்கூடமாக மாறி வரும் கண்ணம்பாக்கம் நெற்களம்
கும்மிடிப்பூண்டி:கண்ணம்பாக்கம் கிராம நெற்களம், இரவு நேரத்தில் மதுக்கூடமாக மாறி வருவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ஆந்திர எல்லையை ஒட்டி கண்ணம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து, ஆந்திரா நோக்கி செல்லும் சாலையோரம் நெற்களம் உள்ளது. விவசாயிகள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நெற்களம், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. இரவு நேரத்தில், மதுபாட்டில்களுடன் பலர் அங்கு படையெடுத்து வருகின்றனர். மறுநாள் காலை, நெற்களம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலி மது பாட்டில்கள் சூழ்ந்து காணப்படுவது வாடிக்கையாக உள் ளது. மேலும், இரவு நேரங்களில் குடிபோதை தகராறுகளும், அடிதடிகளும் அதிகரித்து வருவதாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். நெற்களத்தில் மது அருந்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.