உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கன்னிகாபுரம் நெடுஞ்சாலை வளைவுகளில் விபத்துகள் தடுக்க தகடுகள் அமைப்பு

கன்னிகாபுரம் நெடுஞ்சாலை வளைவுகளில் விபத்துகள் தடுக்க தகடுகள் அமைப்பு

திருத்தணி,:திருத்தணியில் இருந்து, கன்னிகாபுரம் வழியாக மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.அதிகாலை 4:00 மணி முதல், நள்ளிரவு 11:00 மணி வரை இச்சாலையில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் வாயிலாக, திருத்தணி பஜாருக்கும், தனியார் கம்பெனிக்கு செல்லும் ஊழியர்களும் பயணம் செய்கின்றனர்.இந்நிலையில், மாம்பாக்கசத்திரம் - கன்னிகாபுரம் இந்திரா நகர் வரை, 7க்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலையில் அபாயகரமான வளைவுகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.இதையடுத்து, வாகன ஓட்டிகள் நலன் கருதி, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் முதற்கட்டமாக கன்னிகாபுரம் பகுதியில், சாலை வளைவுகளில், நேற்று முதல், அலுமினிய தகடுகளால் சாலையோரம் தடுப்புகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தற்போது, 7 இடங்களில் தடுப்புகள் அமைத்தும், தகடுகள் மீது வாகனங்கள்,மோதாமல் இருப்பதற்காக சிவப்பு விளக்குகள் அமைக்கப்படும். இதுதவிர சாலையோரம் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக சாலையோரம் வளர்ந்து செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை