4 கிலோ கஞ்சா பறிமுதல் கர்நாடக வாலிபருக்கு சிறை
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்துவதாக மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவுபடி கடம்பத்துார் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த இருவரில் ஒருவர் போலீசாரைக் கண்டதும் தப்பியோடினார். மற்றொரு நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த பிரவீன், 25, என தெரிந்தது. அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 40,000 ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.பிரவீனை திருவள்ளூர் போதைப்பிரிவு மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அணில் என்பவரை தேடி வருகின்றனர்.