உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மண்ணெண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்து

மண்ணெண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்து

திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே ரேஷன் கடைக்கு மண்ணெண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து ரேஷன் கடை வினியோகத்திற்காக மண்ணெண்ணெய் ஏற்றிய லாரி, திருவாலங்காடு அடுத்த ஓரத்தூர் நோக்கி சென்றது. இந்த லாரியை பள்ளிப்பட்டைச் சேர்ந்த சுந்தர், 40, என்பவர் ஓட்டினார். மணவூர் ---- தொழுதாவூர் இடையே உள்ள ஓடை தரைப்பாலத்தின் அருகே லாரி வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த 5,000 லிட்டர் மண்ணெண்ணெய் கசிவு இன்றி தப்பியது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை