உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அடிப்படை வசதிகளுக்கு அல்லாடும் கொரஞ்சூர் கிராமம்

அடிப்படை வசதிகளுக்கு அல்லாடும் கொரஞ்சூர் கிராமம்

மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியம், நெய்தவாயல் ஊராட்சிக்கு உட்பட்ட தமிழ் கொரஞ்சூர் கிராமத்தில், 150 வீடுகள் உள்ளன. கிராமத்தில், சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கிராமவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி தவிக்கின்றனர்.கிராமத்திற்கு செல்லும் சாலை முழுதும் சரளை கற்கள் பெயர்ந்தும், முள்செடிகள் சூழ்ந்தும் இருக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குடிநீர் தட்டுப்பாடால் அன்றாடம் தவிக்கின்றனர். அங்குள்ள ஊர் பொதுக்குளம், பாசிபடிந்து பாழடைந்து கிடப்பதால், அதிலுள்ள தண்ணீரையும் பயன்படுத்த முடியவில்லை. ஆழ்துளை மோட்டார் ஒன்று பழுதாகி, சீரமைக்கப்படாமல் இருக்கிறது.இங்குள்ளவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க 2 கி.மீ., தொலைவில் உள்ள கே.ஆர்.பாளையம் செல்ல வேண்டிய உள்ளது. முதியவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.கிராமத்தில் ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் என, பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என, கிராமவாசிகள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:தேர்தல் நேரத்தில் மட்டுமே நாங்கள் ஆட்சியாளர்களுக்கு தெரிகிறோம். மற்ற நேரங்களில் எங்கள் பிரச்னைகளை கேட்க யாருமில்லை. நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்திற்க தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ