உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெங்கடேச பெருமாள் கோவிலில் 29ல் கும்பாபிஷேகம்

வெங்கடேச பெருமாள் கோவிலில் 29ல் கும்பாபிஷேகம்

கடம்பத்துார்:கடம்பத்துார் வெங்கடேச பெருமாள் கோவிலில் வரும் 29ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கசவல்லாத்துாரில் அமைந்துள்ளது வெங்கடேச பெருமாள் கோவில். இக்கோவில் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 29ம் தேதி மகா கும்பாபிஷகேம் நடைபெற உள்ளது. நாளை 28 ம் தேதி காலை 8:30 மணிக்கு கணபதி பூஜையும், கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தியும், முதல்கால யாக சாலை பூஜையும் நடக்கிறது. 29ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும், காலை 9:30 மணிக்கு பூர்ணாஹூதியும் ராதா ருக்மணிக்கு சிறப்பு பூஜையும், காலை 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி