உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

திருவள்ளூர்:வேம்புலி அம்மன் கோவில், தேவி கருமாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.திருவள்ளூர், மேட்டுத் தெருவில் வேம்புலி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் விழா கடந்த 29ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை நான்காம் கால பூஜை நடந்தது.தொடர்ந்து, வேம்புலி அம்மன், திருக்காளி அம்பாள் கோவிலில் உள்ள கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை எல்லாபுரம் ஒன்றியம், சென்னங்காரணி ஊராட்சி, மேட்டுக்கண்டிகை கிராமத்தில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டதால், பக்தர்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு, கடந்த 30ம் தேதி காலை கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு பரிவாரமூர்த்திகள் புறப்பாடு, கலச புறப்பாடு, விமான கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 - 10:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை