உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் கிராமத்தில் அமைந்துள்ளது அபயவரத ஆஞ்சநேயர் கோவில்.இக்கோவில் 50 ஆண்டுகளுக்கு முன் பாழடைந்து இருந்தது. இக்கோவிலை கட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அப்பகுதிவாசிகள் தீர்மானித்தனர்.இதையடுத்து நான்கு மாதத்திற்கு முன் கட்டடம் எழுப்பப்பட்டு கடந்த வாரம் பணி முடிந்தது. இதையடுத்து கடந்த, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு கணபதி ஹோமமும், மதியம், 12:00 மணிக்கு பூர்ணஹூதியும் வழங்கப்பட்டது.இரவு, 8:00 மணிக்கு, முதல் கால பூஜை, வேத விண்ணப்பம் சாத்துமுறை நடந்தது.நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், 9:00 மணிக்கு மஹா சாந்தி ஹோமமும், 10:30 மணிக்கு உற்சவர் அபிஷேகமும் நடந்தது. 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இரவு 8:30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடந்தது.நேற்று காலை, 7:00 மணிக்கு புண்யாகவாசனம், 9:00 மணிக்கு கடம்புறப்பாடும், 10:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.மதியம் 1:30 மணிக்கு உற்சவர் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் தொழுதாவூர் ஊராட்சி தலைவர் அருள்முருகன் மற்றும் இந்திரா குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் இந்திரா உட்பட பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.ஊத்துக்கோட்டை அருகே, லட்சிவாக்கம் கிராமத்தில் உள்ளது ஸ்ரீசெங்காளம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டதால், பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கும் பணி துவக்கி, நடந்தது. பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. 8ம் தேதி மாலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.நேற்று காலை யாத்ரா தானம், கலச புறப்பாடு, கலசம் ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி, காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோபுரத்தில் ஊற்றப்பட்ட கலச நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். மாலை, 6:00 மணிக்கு உற்சவர் செங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.திருத்தணி காந்தி நகர் பகுதியில் உள்ள நல்லதண்ணீர் குளக்கரையில், புதியதாக முனீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் கணபதி மற்றும் நவகிரக ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 36 கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு நான்காம் யாக சாலை பூஜையும், கலச ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வழிப்பட்டனர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முனீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். திருத்தணி அடுத்த பள்ளியாங்குப்பம் கிராமத்தில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் திருப்பணிகள் நடந்து நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவகிரக ஹோமம், சாந்தி ஹோமம், கோ பூஜை நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை, 8:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலம் காலை, 8:45 மணிக்கு கோவில் கோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை, 9:30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு கலசநீர் ஊற்றி சிறப்பு பூஜை நடந்தது.இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். -- நமது நிருபர்குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை