மேலும் செய்திகள்
இன்று இனிதாக (03.11.2024) திருவள்ளூர்
03-Nov-2024
இன்றைய நிகழ்ச்சி
17-Nov-2024
திருத்தணி, நவ. 21-திருத்தணி கன்னிக்கோவில் எதிரே உள்ள சிவவிஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக, கோவில் வளாகத்தில் யாகசாலை, 36 கலசங்கள் வைத்து பூஜைகள் நடந்தது. காலை 9:30 மணிக்கு கலச ஊர்வலம் மற்றும் மூலவர் அம்மன் மீது கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதேபோல், மாமண்டூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் கோவிலில், நேற்று கும்பாபிஷேகத்தை ஒட்டி, கோவில் வளாகத்தில், 108 கலசங்கள் வைத்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 10:00 மணிக்கு கலச ஊர்வலம் மற்றும் மூலவர் சன்னிதியில் உற்சவ மூர்த்திகளுக்கு கலசநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.இரவு 7:30 மணிக்கு உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
03-Nov-2024
17-Nov-2024