உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குண்ணம்மஞ்சேரி - பெரியகாவணம் ரயில்வே மேம்பால பணி தீவிரம்

குண்ணம்மஞ்சேரி - பெரியகாவணம் ரயில்வே மேம்பால பணி தீவிரம்

பொன்னேரி : சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, பெரியகாவணம் பகுதியில், எல்.சி., 26 எண் கொண்ட ரயில்வே கேட் உள்ளது.இது, புதுவாயல் - சின்னகாணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ளதால், புதுவாயல், ஏலியம்பேடு, பெரியகாவணம், குண்ணம்மஞ்சேரி பகுதிகளை சேர்ந்தவர்கள் பொன்னேரி மற்றும் பழவேற்காடு செல்வதற்கு பயன்படுத்துகின்றனர்.மேற்கண்ட கிராமவாசிகள் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் காத்திருப்பதை தவிர்க்க, 2022ல் இங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. நில எடுப்பு பணிகளால் இருபுறமும் இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் இழுபறியில் இருந்தன.இந்நிலையில், கடந்த ஆண்டு, ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்க, தமிழக அரசு, 59.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.அதையடுத்து, இணைப்பு சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுவத்துவது, வீடுகளை அகற்றுவது, இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் விடப்பட்டு, தற்போது இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.பாலத்தின் இருபுறமும், 948 மீ. நீளத்தில், 31.5 மீ. அகலத்தில் இணைப்பு சாலை பணிகளுக்காக துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தனிப்பாதை, மழைநீர் செல்வதற்கு கால்வாய் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி