மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
10-Jan-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை முதல், பிப்.13ம் தேதி வரை தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 'ஸ்பார்ஸ்' தொழுநோய் விழிப்புணர்வு முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:காந்தி நினைவு நாளான ஜன.,30ல் உலக தொழுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை முதல், பிப். 13ம் தேதி வரை, 'ஸ்பார்ஸ்' தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.மாவட்டத்தில் ஐந்து ஒன்றியத்தில், தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற உள்ளது. வீடு வீடாக சென்று, சுகாதார துறையைச் சேர்ந்த களப் பணியாளர் மற்றும் தன்னார்வலர் இப்பணி மேற்கொள்ள உள்ளனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி, மாணவ - மாணவியருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், மருத்துவப் பணி துணை இயக்குனர் கனிமொழி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
10-Jan-2025