உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நுாலகம் புதுப்பித்தும் பயனில்லை இரண்டு ஆண்டுகளாக பூட்டு

நுாலகம் புதுப்பித்தும் பயனில்லை இரண்டு ஆண்டுகளாக பூட்டு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கீழ்பாலாபுரம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் தென்மேற்கில் அரசு தொடக்க பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.அதே பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகமும் உள்ளது. இந்த நுாலகம் நீண்ட காலமாக செயல்படாமல் இருந்தது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1.11 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகவும் செயல்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதற்காக செலவிடப்பட்ட அரசு நிதியால், பகுதிவாசிகளுக்கு எந்தவித பயனும் இல்லை. இந்த நுாலகம் செயல்பாட்டிற்கு கொண்ட வரப்பட்டால் பள்ளி மாணவர்கள் மற்றும் பகுதிவாசிகள் பயன்பெறுவர். பேருந்து வசதியே இல்லாத கீழபாலாபுரம் கிராமத்தினரும், நாளிதழ்களை படிக்க வாய்ப்பு ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை